காந்தி!,திலீபன்!! ,வீரவன்சே?

அகிம்சையே 
ஆயுதமாய்க் கொண்டவர்
காந்தி
அதனால் 
அவர் 
மகாத்மா காந்தி 

ஈழத்தமிழர் 
அடிமை விலங்கறுக்க
ஆயுதமும் இயலும்   
அகிம்சையும் இயலும் 
என்றவன் 
அமரன் திலீபன்

அண்ணல் காந்தி
 நீர்
அருந்தியே இருந்தார் 
அமரன் திலீபன்
எதுவும் 
அருந்தாமல் இருந்தான் 

அகிம்சா மூர்த்தி 
ஆயுதத்தால் இறந்தார் 
ஆயுதம் ஏந்திய திலீபன் 
அகிம்சையால் இறந்தான்  

மக்களுக்காகவே  
மாண்டனர் இருவரும் 

மன்னனுக்காக 
இரு நாள்
இருந்து 
வீடு சென்றனன் 
வீர வன்சே

விமல் வீர வன்சே 
உனக்கேன் 
போர்த்தேங்காய்  

Comments