ஐம்புலன்களில்
வாயின்
தொழில் இரண்டு
உண்பதும்
உரைப்பதும்
உண்ணாமல் இருந்து
காக்கும் விரதத்தை விட
உரைக்காமல் இருந்து
காக்கும் விரதம்
மேல்
மௌனத்தில்
சக்தியின்
சேமிப்பு அதிகம்
வெறும் குடமாய்
இருப்பவனுக்கும்
நிறைகுடமாய்
இருப்பவனுக்கும்
இருவருக்கும்
இதுவே நலம்
அரைகுறையாய் படித்து
அலட்டுபவரே
அதிகம் இன்று
அதனால் எதற்கும்
மௌனம் நன்று
பிறிதோர் சொல்
வெல்லும் சொல்
என் அறிந்து
சொல்வைதை விடவும்
மௌனம் நன்று
மௌனத்தின்
அர்த்தம் அதிகம்
அரசியலில்
பாருங்களேன்
விமல் வீரவன்சே
உண்ணாமல்
இருக்கப் போய்
மானம் கெட்டதை விட
எதுவும்
உரைக்காமல்
இருந்திருந்தால்
ஈழத்தின் மானம்
காற்றில்
இருந்திருக்கும்
நா
நல்லது
சொல்லப் போயும்
நல்ல
நட்புக்களை இழக்கலாம்
எதற்கும்
மௌனம் நன்று
அது காக்கும்
விரதம்
அதைவிட நன்று

Recent comments
20 weeks 5 days ago
21 weeks 5 days ago
24 weeks 5 days ago