பூராயம் புடுங்காமல் எம் பொழுது விடியட்டும். .

 யார் அவள் 
கதையோடு 
கதை விட்டு 
காரியமாய்  
பூராயம் புடுங்குகின்றாள்

அவள்தான் 
மங்கையர்க்கரசி 
மாதர் சங்கத் தலைவி
மங்கையரின்
மானம் 
அடகு வைக்கும் 
மாதர் குல மாணிக்கம் 
மகத்தான சேவை செய்யும்
மகாராணி 

பூராயம் புடுங்காவிட்டால் 
அவளுக்கு 
பொழுது விடியாது 
அறுத்து அறுத்து 
அலசி
மனதின் 
உள்ளிருக்கும் விடயமெல்லாம் 
வெளிக்கொணரும் 
மின்னல் அவள்

தினமும் மாலை
மாதர் சங்கத்தில் 
திரும்பவும்
அவை அறுத்து   
அலசி ஆராய்ந்து 
ஆட்சேபம் எதுவும் இன்றி 
ஒப்புவிக்கும் ஒய்யாரி 

இரவில் இனியவனிடமும்  
இங்கிதமாயச சொல்லி
இளித்து 
இனிப்புப்  பல வாங்கும் அவன்
இதயத்து ராணி 

இவள் எல்லாம் 
இங்கிருந்து என்ன பயன் 
அவளாரின் கதை எல்லாம் 
அலசி ஆராந்து இவளுக்கு 
ஆவதுதான் என்ன 
கேட்டால் 
அவள்தானாம் 
சமூகததின் சீர்திருத்தவாதி
எனைக் கேட்டால்  
இவளெல்லாம் 
அவள் கதையைச சொல்லி 
தன கதையை மறைக்கும்
காரியக்காரி என்பேன் 
மற்றவர் 
பூராயம் புடுங்காமல் 
எம் பொழுது விடியட்டும்