எழுத்தின் பலம் எழுந்தது போராட்டமாய்

"ஞானசுந்தரம் குகதாசன்- உதயன் பத்திரிகை ஆசிரியர் தாக்கப்பட்டதைக் கண்டித்து பத்திரிகைச சங்கம் பெருமையுடன் எழுதிய தலைப்பு இது."  

எழுத்தின் பலம்
இன்று மட்டும் 
ஏன் 
எழுந்தது போராட்டமாய் 

நாட்டின் 
நலம் காக்க 
நம் பேனா
எழுத வேண்டும் 

நமக்காக 
நாம் எழுதி 
உதை  வாங்கி
எழுந்து 
எழுத்து எழுந்தது 
என்றால் 
நாலு சனம் 
நளினமாய் சிரிக்கும் 

எழுத்து 
என்றுமே 
எழுந்து நிற்க வேண்டும்
எல்லோர் மனதிலும் 
இடம் பிடிக்க வேண்டும் 

எனக்கு மட்டும் 
ஏன்
எழுத்து 
எழுந்து நிற்கிறது !!!

எல்லோர்க்கும் 
எழுந்து நில்
அதுவே எழுத்து 
எழுது !!!