தீர்வே தீர்ப்பு

 

மூவரின்   மரண  தண்டனையை  எதிர்த்து  தீக்குளித்த செங்கொடி நினைவாக இக் கவிதை

 

உயிரை மாய்க்கும் அளவுக்கு
உணர்வு
உணர்வைத் தூண்டிய
தலைவர்களே 
இதற்குப்  பொறுப்பு

செங்கொடி!
உன் அன்னை
தந்த உயிரை
தமிழ் அன்னைக்கு 
ஈந்திருக்கிறாய் 

உயிர்கள்
இருந்து சாதிக்க
பல உண்டு
இறந்து சாதித்தது
எதுவும் இல்லை

இதை 
தலைவர்களே   
தமிழ் மக்களுக்கு 
வாய் விட்டுச்  
சொல்ல வேண்டும் 

கண்ணால் காண்பதுவும் பொய்
காதால் கேட்பதுவும் பொய் 
தீர விசாரிப்பதே மெய் என
பல ஆண்டு 
விசாரித்து 
எழுதிய தீர்வே 
தீர்ப்பு 

மக்கள் ஆணையால்
புரட்சியால்
அல்லது கிளர்ச்சியால்    
நீதியை மாற்றலாம்
அதிலிருக்கும் 
நியாயத்தைச் சொல்லலாம் 
தீர்ப்பை மாற்ற 
எமக்கில்லை 
அதிகாரம்
நீதிக்கில்லை 
தயவு தாட்சணியம்  
  

நம் தமிழ் ஈழத்தில் 
விசாரணையின்றியே
எத்தனை
மரண தண்டனைகள் 
அன்று 
வைக்கோவும் இல்லை 
சீமானும் இல்லை 
செங்கொடி!
நீயும் இல்லை

நீதியை 
நம் கையில் 
எடுத்தே 
தமிழ் ஈழம் 
மலராமல் 
மரணித்துப் போனது