மிருக பலி

அமைச்சர் மேர்வின் சில்வா  முனிஸ்வரம்   
கோவிலுக்கு சென்று மிருக பலிக்கு எதிராக 
மிருகங்களை  அவிட்டு பொலீஸ் காவல்  நிலையத்தில் கையளித்தமை தொடர்பான கவிதை
 

மனிதனை 
கயிற்றால் கட்டுகின்றான்
கட்டின 
ஆட்டை 
அவிட்டு விடுகின்றான் 
மேய்ப்பதே 
இவன் வேலையாய்ப் போச்சு  

மந்தி எல்லாம்
மந்திரியாகி
மக்கள்
பெரும் அவலம் 

ஆண்டவனுக்கு
நேர்த்தி வைச்சு
ஆசையாய் 
வளர்த்த கோழி   
 

ஆண்டவன்  தின்ன இல்லை 
ஆசையாய்   
நாம் எல்லாம்
சேர்ந்து தின்ன

ஆனால் 
மந்திரிக்கும்
மொட்டைக்கும்
பொறுக்க இல்லை
 

நீதி தேவதையோடு
நீதவானும்   எங்கோ
கண்மூடித் 
தூங்குகின்றார்  .   
கண்டும் காணாமல்
எங்கோ கயிலாயத்தில்  
இருக்கின்றார்.

மனிதரைக் 
காவல் காத்த நகர
காவலர்கள் 
மாடாட்டைக் 
காவல் காக்க 
வைத்த மேர்வின் 
நீ வாழ்க!

மிருக பலி 
இனி 
கோவிலில் இல்லை 
காவல் நிலையங்களில் 
ஒவ்வொரு நாளும் 
ஒவ்வொன்றாய்ச்    
சாகும் 
பங்கொன்று
ஏவிய மொட்டைக்கும்  
இவருக்கும் போகும்.

கருத்தைக்
கணிப்பெடுத்தால் 
அமைச்சர் அலவியே
கூடக் 
கலங்குகின்றார் . 
 
காத்தான்குடியில் 
இது நடந்தால் 
காரியம் என்னவாகும்.

இருக்கவே  இருக்கிறார்
அமைச்சர் ஹக்கீம்  
பள்ளி வாசலில் 
வெட்டாமல் 
பதுங்கு குழியில்
வெட்டலாம் என்பார்.

கோவிலில் வெட்டுவதே 
பாவம்
வெட்டினால்
கோதாரியை  
கண்மூடித்
தின்னலாம்
என்பதே  
பௌத்தம்.

  

.