கடல் கடந்த
தமிழருக்கு இப்போ
கருணை பிறககுதடா
காணிகளை
அரசு
பதிவு செய்வதினால்
கடல் கடந்த
தமிழருக்கு தம்
சொந்தங்கள் மேல்
கருணை பிறக்குதடா
காரணத்தோடு பிறக்கும்
காதலுக்கும்
கருணைக்கும்
அர்த்தம் இல்லை
இங்கிருக்கும்
தமிழன் எல்லாம்
தன்மான உணர்ச்சி வீரன்
தன்
சொத்தே
துச்சமென மதித்தவன்
கஞ்சியைப்
பகிர்ந்துண்டு வாழ்ந்தவன்
தர்மத்தின் போராளி
அவனுககேன்
அதர்மச் சொத்து

Comments