பாலகனைப் படிக்க விடு

இந்த ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் சிறந்த 
பெறுபேற்றைப் பெற்ற  நெத்தலியாறு தமிழ் வித்தியாலய மாணவன் பரமேஸ்வரன்
சேதுராகவன் அமைச்சர் பந்துல குணவர்தனவை 
விழுந்து வணங்கி பரிசு பெற மறுத்தமை தொடர்பான 
கவிதை. 

பச்சிளம் பாலகனைப்
படிக்க விடு 
உன் 
பாசறையில் 
தன்மான உணர்ச்சியுள்ள 
தமிழ்ப் பையன் 
என்று சொல்லி 
அவன் 
வாழ்வுதனைப் பாழாக்காதே

தமிழ்த்  தன்மான 
உணர்ச்சியுள்ள 
தமிழன் எல்லாம் 
தலைதெறிக்க ஓடி 
கடல் கடந்து 
நிற்கின்றான்.

காவிய நாயகர்கள் 
எங்கோ 
கலைந்து போனார்கள் 
புத்தி ஜீவிகளோ
புது வழிகள்
கண்டு கொண்டார்
எதுவும் இயலாமல்
எஞ்சி நிற்கும் தமிழன்
இங்கே
வீரன் அவன்
சாதனை செய்கின்றான்
 

மந்திரியை 
மதிக்காத
மானமுள்ள மறத்தமிழன்
அவன்
என்று சொல்லி
அரசியலை உட்புகுத்தி
அவன் சாதனையில்
பங்கு கொண்டு
அவன்
வாழ்வுதனைப் 
பாழாக்காதே.
 
பணம் கொடுத்துதவி 
அவனைப்  
படிக்க வை
அதுவே
தமிழ் அன்னைக்கு
உன்
அர்ப்பணிப்பு