வீமா விடாதே பிடி

 விமல் வீரவன்சே ஐக்கிய நாடுகள் சபை காரியாலயத்திற்கு முன்பாக நடத்திய போராட்டம் 
சம்பந்தமான கவிதை

வீரா வீமா
விடாதே பிடி
உலகெலாம் 
உன் புகழ் பரவ 
உன்னையறியாமல் 
எம் புகழ் பரவும் அதனால்
வீமா
விடாதே பிடி  
உன்னோடு 
நாம் படும் பாடு
உலகறிய 
உரக்கக் குலை
இன்னும் 
நாலைச்
சேர்த்துக் குலை 
உங்கள் நாடகம் 
உலகறியக் குலை
குலைத்து ஓய்ந்தால் 
எம் நிலை 
நிலைத்து விளங்கும்
ஐக்கிய நாடுகளும் 
அகதிகள்  ஆகும் 
விடாதே வீமா
பாங்கி மூனைக்
கலைத்துப் பிடி